/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காங்., இளைஞர் அமைப்பு மேட்டூரில் எழுச்சி பேரணி
/
காங்., இளைஞர் அமைப்பு மேட்டூரில் எழுச்சி பேரணி
ADDED : ஆக 27, 2024 05:11 AM
மேட்டூர்: காங்., இளைஞர் அணியினர் எழுச்சி பயணமாக, மேட்டூரில் இருந்து கொளத்துாருக்கு பேரணியாக சென்றனர்.
காங்., தமிழக இளைஞரணி தலைவராக விச்சு லெனின் பிரசாத் உள்ளார். இவர் நேற்று காலை மேட்டூர் வந்தார். பின்பு கட்சி இளைஞர் அணியுடன், சின்னபார்க் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்பு லெனின் பிரசாத் தலைமையில் இளைஞர் அணியினர், 50க்கும் மேற்பட்டோர் சதுரங்காடி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து டூவீலர், கார்களில் கொளத்துா-ருக்கு பேரணியாக சென்றனர்.தமிழ்நாடு இளைஞர் காங்., பொறுப்பாளர் சாகரிகாராவ், ஒருங்-கிணைப்பாளர் சூர்யா, சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நவீன், தலைவர் மனோஜ், துணை தலைவர் கவுதம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பேரணியை தொடர்ந்து கொளத்துாரில் நடந்த கூட்டத்தில் மேட்டூர், இடைப்பாடி, சங்ககிரி, ஓமலுார் சட்டசபை தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில், 70 இளைஞர்கள் புதி-தாக காங்., கட்சியில் இணைந்தனர்.