/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் வைத்த பாராட்டு விழா பேனரால் சர்ச்சை
/
கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் வைத்த பாராட்டு விழா பேனரால் சர்ச்சை
கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் வைத்த பாராட்டு விழா பேனரால் சர்ச்சை
கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் வைத்த பாராட்டு விழா பேனரால் சர்ச்சை
ADDED : ஆக 17, 2024 04:45 AM
பெ.நா.பாளையம்: கல்யாணகிரி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கட்டப்-பட்டிருந்த பேனரில், தி.மு.க., ஊராட்சி தலைவருக்கு பாராட்டு விழா என குறிப்பிட்டிருந்ததால் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம்,
கல்யாணகிரி ஊராட்சியில் நேற்று முன்தினம் கிராம சபை கூட்டம், தி.மு.க.,வை சேர்ந்த
ஊராட்சி தலைவர் அழகரசன் தலைமையில் நடந்தது. 'கிராம சபை கூட்டம் மற்றும் மத்திய அரசிடம் இருந்து, தேசிய ஊரக வேலை திட்டத்தில், 2024ம் ஆண்டிற்கான சிறந்த தலைவர் விருது பெற்றதற்கான பாராட்டு விழா' என்று குறிப்பிடப்பட்டு பேனர் வைக்கப்பட்டிருந்தது.
பாராட்டு விழாவுடன், கிராம சபை கூட்டமும்
நடந்துள்ளது. கிராம சபை கூட்டத்தில் தனி நபர் புகழ்ச்சி, பாராட்டு விழா நடத்தக் கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. கல்யாணகிரியில், சிறந்த தலைவர் விருது வாங்கிய புகைப்படம், பாராட்டு விழா என்று பேனர் வைத்துள்ளது குறித்த புகைப்ப-டங்கள் வைரலாகி வருவதால் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, கல்யாணகிரி ஊராட்சி தலைவர் அழகரசன் கூறுகையில்,
''மத்திய அரசு விருது வழங்கியதற்கு, கிராம சபை கூட்டத்தில் பாராட்டு விழா நடத்தக்
கூடாது என, எந்த சட்டத்திலும் இல்லை. ஊராட்சி தலைவருக்கு வழங்கிய விருதுக்கு, பாராட்டு விழா நடத்துவதற்கு எனக்கு தான் அதிகாரம் உள்ளது. தி.மு.க., வேட்டி கட்டி சென்று தான் விருது வாங்கினேன். என் வளர்ச்சியை பிடிக்காத சிலர், இதுபோன்று தகவல் கூறி வருகின்றனர். பி.டி.ஓ.,வும், இதுப்பற்றி என்-னிடம் கேட்டபோது, உரிய விளக்கம் கொடுத்துள்ளேன்,'' என்றார்.
பெத்தநாயக்கன்பாளையம் பி.டி.ஓ., (கி.ஊ.,) துரைசாமி கூறு-கையில், ''கிராம சபை
கூட்டத்தில், அதற்குரிய பேனர் மட்டுமே வைக்க வேண்டும். கல்-யாணகிரி ஊராட்சியில், கிராம சபை கூட்டம் மற்றும் விருது வாங்கியதற்காக ஊராட்சி தலைவருக்கு பாராட்டு
விழா என்று குறிப்பிட்டுள்ளது தவறு தான். இதுதொடர்பாக ஊராட்சி தலைவர், செயலரிடம் விளக்கம் கேட்டபோது,
கிராம சபை கூட்டம் நடத்திய பின், பாராட்டு விழா நடந்ததாக கூறினர். ஒரே பேனரில், இரண்டு நிகழ்வுகள் குறிப்பிட்டுள்ளது தவறு தான்,''
என்றார்.

