/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட தம்பதியர் 25 ஆண்டுக்கு பின்பு கைது
/
கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட தம்பதியர் 25 ஆண்டுக்கு பின்பு கைது
கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட தம்பதியர் 25 ஆண்டுக்கு பின்பு கைது
கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட தம்பதியர் 25 ஆண்டுக்கு பின்பு கைது
ADDED : செப் 03, 2024 03:16 AM
மேட்டூர்: கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட தம்பதியரை, 25 ஆண்-டுகளுக்கு பின்பு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேட்டூர், மூப்பனார் நகரை சேர்ந்தவர் கார் டிரைவர் தனபால், 56. மனைவி மகேஸ்வரி, 52. கடந்த, 1995ல் தம்பதியர் மீது, மேட்டூர் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து தம்பதியர் தலைமறைவாகி விட்டனர். இரு-வரையும் போலீசார் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடி-யவில்லை.இதில் தனபால் மீது தீவப்பட்டியில் திருட்டு வழக்கு, சேலம் செவ்வாய்பேட்டையில், 1996ல், அஸ்தம்பட்டியில், 1997, பள்-ளப்பட்டியில், 1996ல் பேர்லாண்ட்ஸில், 1997 என சேலத்தில் நான்கு ஸ்டேஷன்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. தலைம-றைவான தம்பதியரை கண்டுபிடிக்க மேட்டூர் ஸ்டேஷன் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாசரணையில், தம்பதியர் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
அவர்களை, 25 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று மேட்டூர் தனிப்-படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஓமலுார் சிறையில் அடைத்தனர்.