/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆத்துார் துணை மின்நிலையத்தில் ஒயர் அறுந்து வினியோகம் பாதிப்பு
/
ஆத்துார் துணை மின்நிலையத்தில் ஒயர் அறுந்து வினியோகம் பாதிப்பு
ஆத்துார் துணை மின்நிலையத்தில் ஒயர் அறுந்து வினியோகம் பாதிப்பு
ஆத்துார் துணை மின்நிலையத்தில் ஒயர் அறுந்து வினியோகம் பாதிப்பு
ADDED : செப் 15, 2024 03:57 AM
ஆத்துார்: ஆத்துார், பாரதி நகரில் உள்ள துணை மின்நிலையத்தில் இருந்து, ஆத்துார், நரசிங்கபுரம் நகர், அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.
இதில் ராமநாயக்கன்பாளையம் வழியே பெத்தநாயக்கன்பாளையத்துக்கு செல்லும் மின்வழிப்பாதையின் கம்பி நேற்று அறுந்து விழுந்தது. மதியம், 3:00 மணிக்கு மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. பணியாளர்கள், துணை மின்நிலையத்தில் அறுந்து கிடந்த ஒயர்களை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். மாலை, 6:20 மணிக்கு மின்வினியோகம் வழங்கப்பட்டது.அதேபோல் நரசிங்கபுரம், உடையம்பட்டி பாதையில், 7 இடங்களில் ஒயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் மின் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டதால் இரவு, 8:00 மணிக்கு மேலாகியும், நரசிங்கபுரத்தில் மின் வினியோகம் வழங்கப்படவில்லை. இதனால் நரசிங்கபுரம் நகர், சுற்றுவட்டார கிராமங்களில், 5 மணி நேரத்துக்கு மேல் மின்வினியோகம் பாதிப்பு ஏற்பட்டு மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
இதுகுறித்து நரசிங்கபுரம் அ.தி.மு.க., கவுன்சிலர் கோபி கூறுகையில், 'மின்வாரிய அலுவலர்களை தொடர்பு கொண்டபோது, 7 இடங்களில் ஒயர் அறுந்து விழுந்துள்ளது. சரிசெய்ததும் மின்வினியோகம் செய்வதாக கூறினர். காற்று, மழை இல்லாத நேரத்தில் ஒயர்கள் அறுந்து விழுந்தது எப்படி என தெரியவில்லை,'' என்றார்.