/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மணிவிழுந்தான் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம்
/
மணிவிழுந்தான் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம்
மணிவிழுந்தான் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம்
மணிவிழுந்தான் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம்
ADDED : மே 21, 2024 11:49 AM
ஆத்துார்: தலைவாசல் அருகே, மணிவிழுந்தான் தெற்கு பகுதியில், 80 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் மட்டுமின்றி, கால்நடைகளுக்கு மேய்ச்சல் மற்றும் நீர் ஆதாரமாகவும் பயன்படுத்துகின்றனர். ஏரியில் கட்லா, ரோகு, ஜிலேபி மீன்கள் வளர்க்கப்பட்டு, அவற்றை குத்தகை முறையில் ஏலம் விடப்பட்டு வருகிறது.
சில மாதங்களாக வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வந்த நிலையில், மணிவிழுந்தான் ஏரியில் உள்ள தண்ணீர் பச்சை நிறத்துக்கு மாறியது. தற்போது ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மழை நீர் ஏரிக்கு வந்தபோது, ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இறந்த மீன்கள் குவியல், குவியலாக கரை ஒதுங்கி உள்ளதால் துர்நாற்றம் வீசி வருகிறது. அவ்வழியே செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமமான நிலையில், ஏரி பகுதியை கடந்து செல்கின்றனர். செத்து மிதக்கும் மீன்களை, நீர்வளத்துறை அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தலைவாசல் நீர் வளத்துறை உதவி பொறியாளர் மாணிக்கம் கூறுகையில், ''தற்போது கோடை மழை பெய்து வருவதால், புதிய தண்ணீர் பழைய தண்ணீருடன் சேரும்போது, ஆக்சிஜன் அளவு மாற்றம் ஏற்படும். ஆக்சிஜன் அதிகரிப்பு மற்றும் குறைந்தாலும் மீன்கள் இறந்துவிடும். பருவ நிலை மாற்றத்தில் மீன்கள் இறந்திருக்கலாம். இறந்த மீன்களை, ஊராட்சி நிர்வாகம் மூலம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

