/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் மத்திய சிறை கைதி இறந்த விவகாரம்; உதவியாளருக்கு மெமோ
/
சேலம் மத்திய சிறை கைதி இறந்த விவகாரம்; உதவியாளருக்கு மெமோ
சேலம் மத்திய சிறை கைதி இறந்த விவகாரம்; உதவியாளருக்கு மெமோ
சேலம் மத்திய சிறை கைதி இறந்த விவகாரம்; உதவியாளருக்கு மெமோ
ADDED : ஆக 17, 2024 04:40 AM
சேலம்: சேலம் மத்திய சிறை கைதி இறந்த விவகாரத்தில், அலுவலக உத-வியாளருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மத்திய சிறையில், சூரமங்கலத்தை சேர்ந்த தீனா என்ற தீனதயாளன், 31, தண்டனை கைதி. கடந்த வாரம் உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். இவரை சேலம் அரசு மருத்து-வமனைக்கு கொண்டு சென்றும், சிகிச்சை பலனின்றி உயிரி-ழந்தார். இது தொடர்பாக, நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தி வருகிறார்.
கைதி இறந்த தகவல் குறித்து, சிறையில் உள்ள தண்டனை பிரிவு அதிகாரிகளுக்கு காலை, 10:30 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்-டது. ஆனால் அதிகாரிகள் மதியம், 1:00 மணிக்கு தான் வந்துள்-ளனர். புகார் கொடுப்பதற்காக கைதியின் உறவினர்கள் அங்கு திரண்டு விட்டனர், போலீசார் சமாதானப்படுத்தினர். சிறை அதி-காரிகள் சரியான நேரத்தில் வராததால், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது விசாரணையில்
தெரியவந்துள்ளது.
இதனால், தண்டனை பிரிவு அலுவலக உதவியாளர் நாகராஜிடம் விளக்கம் கேட்டு சிறை கண்காணிப்பாளர் வினோத் மெமோ கொடுத்துள்ளார். ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

