/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேளாண் கூடத்துக்கு பருத்தி வரத்து சரிவு
/
வேளாண் கூடத்துக்கு பருத்தி வரத்து சரிவு
ADDED : ஆக 17, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: கொளத்துார், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நேற்று பருத்தி வரத்து, நான்கு டன்னாக
சரிந்தது.
கொளத்துார், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு வாரம்தோறும் வெள்ளிக்கிழமை காலை சுற்றுப்பகுதி விவசா-யிகள் பருத்தி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று மொத்தம், 2.49 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 107 மூட்டைகளில், 4,060 கிலோ பருத்தி வரத்தானது. குறைந்தபட்சம் ஒரு டன், 60 ஆயிரம் முதல் அதிகபட்சம், 63 ஆயிரம் ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல்
செய்தனர்.
கடந்த வாரம், 6,580 கிலோ பருத்தி விற்பனைக்கு வந்த நிலையில் நேற்று பருத்தி வரத்து, 4,060 கிலோவாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

