/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பால் நீர்மின் நிலையங்களில் உற்பத்தி சரிவு

ADDED : ஆக 17, 2024 04:52 AM
மேட்டூர்: மேட்டூர் அணை பாசன நீர் திறப்பு குறைந்ததால், அதற்கேற்ப அணை, கதவணை மின் நிலையங்களில் மின் உற்பத்தி
சரிந்துள்ளது.
மேட்டூர் அணை முழு கொள்ளளவான, 120 அடியை கடந்த, 30ல் எட்டியது. அணை நீர்வரத்து மளமளவென உயர்ந்ததால் கடந்த, 29 முதல் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. இதில் வினா-டிக்கு, 21,500 கனஅடி நீர் அணை, சுரங்க மின் நிலையங்கள் வழியாகவும், மீதமுள்ள நீர் உபரியாக, 16 கண் மதகு வழியா-கவும் வெளியேற்றப்பட்டது.
கடந்த மாதம், 29 முதல் கடந்த, 14 வரை அணை மின் நிலையங்-களில், 250 மெகாவாட், காவிரி குறுக்கேயுள்ள, 7 கதவணை மின் நிலையங்களில் தலா, 30 மெகாவாட் வீதம், 210 என மொத்தம், 460 மெகாவாட் முழு மின் உற்பத்தி செய்யப்பட்டது.
நீர்வரத்து குறைந்ததால், கடந்த இரு நாட்களாக அணையில் இருந்து மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு, 16,000 கனஅடி நீர் பாசனத்துக்கு வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் அணை மின் நிலையங்களில், 160 மெகாவாட், 7 கதவணை நிலையங்-களில் தலா, 22 முதல், 25 மெகாவாட் வீதம் அதிகபட்சம், 175 மெகாவாட் என அதிகபட்சம், 335 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்
படுகிறது.
மேட்டூர் அணை பாசன நீர் திறப்பு குறைந்ததால், நீர்மின் நிலை-யங்களில் கடந்த இரு நாட்களாக, 135 மெகாவாட் மின் உற்பத்தி சரிந்துள்ளது.