/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மருந்து மீதான ஜி.எஸ்.டி., ரத்து செய்ய வலியுறுத்தல்
/
மருந்து மீதான ஜி.எஸ்.டி., ரத்து செய்ய வலியுறுத்தல்
மருந்து மீதான ஜி.எஸ்.டி., ரத்து செய்ய வலியுறுத்தல்
மருந்து மீதான ஜி.எஸ்.டி., ரத்து செய்ய வலியுறுத்தல்
ADDED : ஆக 02, 2024 10:25 PM
சேலம்,:தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில், 'மக்களுக்கான மருத்துவம்' கேட்டு தெருமுனை பிரசாரம், சேலம், கோட்டை மைதானத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் திலீப் பேசியதாவது:
மத்திய அரசு, உள்நாட்டு மருந்து, மாத்திரை உற்பத்தியில் வெறும், 2 சதவீதம் மட்டுமே சுகாதாரத்துக்கு ஒதுக்கீடு செய்வதை, 5 சதவீதமாக உயர்த்தி வேண்டும். மருந்து, மருத்துவ உபகரணங்களுக்குரிய, 12 சதவீத ஜி.எஸ்.டி., வரியை அறவே ரத்து செய்தால் அதன் விலை குறையும். அத்துடன் நிறுவனங்களும் லாபத்தை குறைக்க நடவடிக்கை எடுத்தால், மருந்துகள் விலையை மேலும் குறைக்க முடியும்.
தடுப்பூசி நிறுவனங்களை சீரமைத்து உற்பத்தியை மேற்கொண்டால், அது தரமாக இருப்பதோடு, குறைந்த விலைக்கு கிடைக்கும். காப்புரிமை பெறப்பட்ட அத்யாவசிய மருந்துகளுக்கு கட்டாய உரிமம் வழங்கி, குறைந்த விலைக்கு தயாரித்து மக்களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது நாடு முழுதும், 395 இடங்களில் தெருமுனை பிரசாரம் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.