sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பால் கொள்முதல் ரூ.756 கோடி நிலுவை தாமதமின்றி சங்கங்களுக்கு வழங்க கோரிக்கை

/

பால் கொள்முதல் ரூ.756 கோடி நிலுவை தாமதமின்றி சங்கங்களுக்கு வழங்க கோரிக்கை

பால் கொள்முதல் ரூ.756 கோடி நிலுவை தாமதமின்றி சங்கங்களுக்கு வழங்க கோரிக்கை

பால் கொள்முதல் ரூ.756 கோடி நிலுவை தாமதமின்றி சங்கங்களுக்கு வழங்க கோரிக்கை


ADDED : ஆக 18, 2024 04:15 AM

Google News

ADDED : ஆக 18, 2024 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: ''பால் கொள்முதல் தொகை, 756 கோடி ரூபாய் நிலுவையை, தாமதமின்றி சங்கங்களுக்கு வழங்க வேண்டும்,'' என, மாநில தலைவர் ராஜேந்திரன் வலியுறுத்தினார்.

சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பணியாளர் சங்க, மாவட்ட செயற்குழு கூட்டம், வாழப்பாடியில் நேற்று நடந்-தது. தமிழக பால் உற்பத்தியாளர் நலச்சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் காந்தி முன்-னிலை விகித்தார். இதில், 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில செயலர் கணேசன், மாவட்ட செயலர் ஜெயக்-குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளர் பாபு, நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்ந்து மாநில தலைவர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதா-வது: ஆவின் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு, பால் வழங்கும் உற்-பத்தியாளர்களுக்கு, அரசு நிதி உதவியாக அறிவித்த

லிட்டருக்கு, 3 ரூபாய் ஊக்கத்தொகை, 75 நாட்களாக வழங்கப்ப-டவில்லை. பால் கொள்முதல் தொகை, 756 கோடி ரூபாய் நிலுவை தொகையை தாமதமின்றி சங்கங்களுக்கு வழங்க வேண்டும். இரு தொகைகளையும் கொடுக்கும்படி கேட்டுக்-கொள்ளப்படுகிறது.

சங்க பணியாளர், 1983 முதல், பணி வரைமுறைப்படுத்தப்ப-டாமல் உள்ளனர். ஏறக்குறைய, 25,000 பணியாளர்களின் வாழ்-வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. முதல்வர் இப்பிரச்னையில் தலையிட்டு, சட்டப்படி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு பணி நிபந்தனையில் இருந்து விதிவிலக்கு அளிக்க, அவசர சட்டம் இயற்றி, எங்கள் வாழ்வாதாரத்தை காப்-பாற்ற வேண்டும் உள்பட, 9 கோரிக்கைகளை அரசுக்கு முன்-வைத்துள்ளோம். முதல்வர், பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உழைப்பாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us