/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீடு, கடைகளை சூழ்ந்த தண்ணீரால் அவதி முறையாக கால்வாய் அமைக்க கோரிக்கை

ADDED : செப் 09, 2024 07:15 AM
தாரமங்கலம்: மேட்டூர் காவிரி உபரிநீரால், 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தில் தாரமங்கலம் பெரிய ஏரி கடந்த, 2ல் நிரம்பியது. தொடர்ந்து அதில் இருந்து வெளியேறிய தண்ணீர், சார் - பதிவாளர் அலுவலக பின்புறம், சரஸ்வதி நகரை கடந்து வேடப்பட்டி சாலை கால்வாய் வழியே, குருக்குப்பட்டி ஏரிக்கு சென்றது.
ஆனால் பெரிய ஏரி அருகே உள்ள கால்வாயை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் வெளியே றிய தண்ணீர், அப்பகுதியில் உள்ள வீடு, கடைகளை சூழ்ந்து ஓமலுார் பிரதான சாலையில் நேற்று வழிந்தோடியது. பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர். இதை அறிந்து அங்கு வந்த நெடுஞ்சாலை துறையினர், பொக்லைன் மூலம் மண் கொட்டி, தண்ணீர் சாலைக்கு வருவதை தடுத்தனர்.
தொடர்ந்து ஓடை பிள்ளையார் கோவில் எதிரே உள்ள கால்வாய்க்கு தண்ணீர் திருப்பிவிடப்பட்டது. மேலும் வீடு, கடைகளில் தண்ணீர் தேங்குவதை தடுத்து முறையாக கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.