ADDED : ஆக 25, 2024 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு
ஆத்துார், ஆக. 25-
ஆத்துார் நகராட்சி, 30வது வார்டு, தெற்கு மாரியம்மன் கோவில் தெரு, பெரியார் தெரு உள்ளிட்ட பகுதிகளில், டெங்கு கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக நகராட்சி தலைவி நிர்மலாபபிதா தலைமையில் கவுன்சிலர்கள், கமிஷனர் சையது முஸ்தபாகமால், துாய்மை பணியாளர்கள், டெங்கு தடுப்பு உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து வீடு தோறும் சென்ற பணியாளர்கள், டெங்கு கொசு ஒழிப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.