/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பொன்னாளியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
/
பொன்னாளியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
பொன்னாளியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
பொன்னாளியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
ADDED : மே 21, 2024 11:58 AM
ஆத்துார்: வீரகனுார், பொன்னாளியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில், அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தலைவாசல் அருகே வீரகனுார், தெற்குமேடு பகுதியில் கற்பத்தரு பொன்னாளி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த, 17ல், கொடியேற்றம், சக்தி அழைத்தல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தல், பால்குடம் எடுத்துக் கொண்டு மேள தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். 108 பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனர். மஞ்சள், குங்குமம், தாலி கயிறு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. வீரகனுார், சொக்கனுார், தெடாவூர், நல்லுார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.