/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சென்றாயபெருமாள் கோவிலில் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
/
சென்றாயபெருமாள் கோவிலில் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
சென்றாயபெருமாள் கோவிலில் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
சென்றாயபெருமாள் கோவிலில் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : மே 28, 2024 07:26 AM
வீரபாண்டி: ராக்கிப்பட்டி, சென்றாய பெருமாள் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, நேற்று நடந்த தீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் காகாபாளையம் அருகே, ராக்கிப்பட்டி செங்கோடம்பாளையத்தில் பழமையான சென்றாய பெருமாள் மலைக்கோவில் உள்ளது. இதை புதுப்பித்து நாளை (மே 29) கும்பாபி ேஷகம் நடத்தப்படவுள்ளது. முகூர்த்த கம்பம் கடந்த, 19ல் நடப்பட்டது. நேற்று காலை 4:30 மணிக்கு சேனை முதலியார், மகா சுதர்சன யாகத்துடன் விழா முறைப்படி துவங்கியது.
காலை, 7:00 மணிக்கு அருகிலுள்ள ராமர் கோவிலில் இருந்து தீர்த்தக்குட ஊர்வலம் மேள தாளம் வாண வேடிக்கைகளுடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் புனிதநீர் நிரம்பிய கலசங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
முக்கிய நிகழ்ச்சியான கும்பாபி ேஷகம் நாளை காலை, 6:15க்கு மேல், 7:15 மணிக்குள் கோபுர கலசத்துக்கும், மூலவர் சென்றாய பெருமாளுக்கும் யாகத்தில் வைத்து பூஜித்த புனிதநீர் ஊற்றி கும்பாபி ேஷகம் நடத்தப்படும்.