/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெண் குழந்தை சிகிச்சைக்கு உதவிட பெற்றோர் தர்ணா
/
பெண் குழந்தை சிகிச்சைக்கு உதவிட பெற்றோர் தர்ணா
ADDED : செப் 03, 2024 03:14 AM
சேலம்: இடைப்பாடி அடுத்த சித்துார் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி, 33, தனியார் பஸ் கண்டக்டர். இவர் தனது மனைவி தனலட்சுமி, இரு குழந்தைகளுடன், நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தவர், திடீரென உள்வளாக பகுதியில் அமர்ந்து தர்ணா செய்தார்.
போலீசார் சமாதானப்படுத்தியதும், மனு கொடுத்த பின், அவர் கூறியதாவது: எனக்கு இரு வயதில் மகன் ஜஸ்வந்த், அட்சயா என்ற 6 மாத பெண் குழந்தை உள்ளனர். சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மகளுக்கு நடத்திய பரிசோதனையில், இருத-யத்தில் ஓட்டை இருப்பது தெரிந்தது.
எனவே, பெங்களூருவில் சிகிச்சைக்காக சென்றபோது, காப்பீடு அட்டை பொருந்தாது. அறுவை சிகிச்சைக்கு, 5.15 லட்ச ரூபாய் செலவாகும் என்றனர். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை-யென்பதால், மாவட்ட நிர்வாகம் அறுவை சிகிச்சைக்கு உதவிட வேண்டும்,'' என்றார்.சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறு-கையில், ''தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ், குழந்தைக்கு அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்-கப்படும்,'' என்றார்.