/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவரை சாதனையாளராக மாற்றும் தீரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லுாரி
/
மாணவரை சாதனையாளராக மாற்றும் தீரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லுாரி
மாணவரை சாதனையாளராக மாற்றும் தீரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லுாரி
மாணவரை சாதனையாளராக மாற்றும் தீரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லுாரி
ADDED : மே 06, 2024 02:05 AM
சேலம்: சேலம், ஓமலுார் அருகே தீரஜ் லால் காந்தி தொழில்நுட்பக்கல்லுாரி செயல்படுகிறது. அதன் ஸ்தா பகர் தீரஜ்லால் காந்தி வழிகாட்டுதல்படி, தொழில்நுட்பங்களை, செயல்முறை பயிற்சி மூலம் மாணவ, மாணவியருக்கு கற்பிக்கும் அனுபவமிக்க ஆசிரியர்கள், அதிநவீன ஆய்வகங்களுடன் செயல்படுகின்றன.
கல்லுாரி செயலர் அர்ச்சனா மனோஜ்குமார் கூறுகையில், ''பேராசிரியர்கள், தொழில்நுட்ப அறிவு, திறமையை தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருக்கின்றனர். இதனால் கடந்த இரு ஆண்டுகளில் இக்கல்லுாரி பேராசிரியர்கள், 12 காப்புரிமைகளை பெற்றுள்ளனர்,'' என்றார்.
முதல்வர் செல்வராஜ் கூறுகையில், ''நான் முதல்வன் பயிற்சி திட்டத்தில் இறுதி ஆண்டு மின்னியல், மின்னணுவியல் துறை மாணவ மாணவியர் தயாரித்த, வாகனங்களுக்கான, 'ஆட்டோமேட்டிக் ஸ்பீடு கன்ட்ரோல் சிஸ்டம்', தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்தை ஈர்த்து பாராட்டை பெற்றுத்தந்தது. மேலும், 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களுடன், நாங்கள் கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்புகள், தொழில்நுட்ப கூட பயிற்சிகள் முதலானவற்றுக்கு உறுதுணையாக உள்ளது,'' என்றார்.
துணை முதல்வர் வெங்கடேஷ் கூறுகையில், ''ஏ.ஐ.சி.டி., பரிந்துரைப்படி கிடைத்த நிதி உதவியில் மெக்கானிக்கல், இ.சி.இ., துறைகளில் ஆய்வகங்கள் மேலும் நவீன மயமாக்கப்பட்டுள்ளன,'' என்றார்.
பிளேஸ்மென்ட் டைரக்டர், ஏ.ஐ.டி.எஸ்., துறை தலைவர் பார்த்தசாரதி கூறுகையில், ''மாணவ, மாணவியருக்கு தேவையான திறன் பயிற்சிகளை வழங்கி, ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறும்படி, முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறோம்,'' என்றார்.