sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கர்நாடகாவிடம் துரைமுருகன் காசு வாங்கிட்டாரா?' பா.ஜ., அண்ணாமலை குற்றச்சாட்டு

/

கர்நாடகாவிடம் துரைமுருகன் காசு வாங்கிட்டாரா?' பா.ஜ., அண்ணாமலை குற்றச்சாட்டு

கர்நாடகாவிடம் துரைமுருகன் காசு வாங்கிட்டாரா?' பா.ஜ., அண்ணாமலை குற்றச்சாட்டு

கர்நாடகாவிடம் துரைமுருகன் காசு வாங்கிட்டாரா?' பா.ஜ., அண்ணாமலை குற்றச்சாட்டு


ADDED : ஆக 04, 2024 03:52 AM

Google News

ADDED : ஆக 04, 2024 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ''மேகதாது விவகாரத்தில், கர்நாடகா அரசிடம், அமைச்சர் துரை-முருகன் காசு வாங்கி விட்டாரா?,'' என்று, தனக்கு சந்தேகம் வரு-வதாக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில், தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்-தினார். பின் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கடந்த ஆட்சியின் நிறைவில், பணிகளை முடித்துவிட்டோம் என்று கூறினர். இந்த ஆட்சி துவங்கி மூன்றாண்டுகளாகியும் தினமும் ஒரு காரணம் கூறி தள்-ளிப்போடுகிறது. இதுபற்றி பா.ஜ., சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. தமிழகத்தில் கொலைகளின் எண்ணிக்கை அதிக-ரித்து வருகிறது. நேற்றுக்கூட கோவையில் ஒருவர் கொலை செய்-யப்பட்டார்.

எப்போதும் முன்விரோதமும், காரணங்களும் கொலைக்கு இருந்-தாலும், ஏன் இப்போது அதிகரித்துள்ளது என பார்க்க வேண்டும். இப்போது காவல் துறையின் கைகள் கட்டுப்பட்டுள்ளன. எங்கு வேண்டுமானாலும் கொலை செய்யலாம். 3 மாதத்தில், 6 மாதத்தில் பெயில் வந்துவிடும் தைரியம். இதற்கு போலீஸ் ஸ்டேஷனில், போலீஸ்காரர்கள் செய்ய வேண்டிய பணிகளை செய்யவில்லை. அதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு அரசு வழங்கவில்லை. மேகதாது அணை அமைக்க கர்நாடகா முயல்வ-தற்கு, மத்திய அரசின் மீது சந்தேகமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறுகிறார். எனக்கும் சீனியர் அமைச்சரான துரைமு-ருகன் மீது ஒரு சந்தேகம் வருகிறது. கர்நாடகா காங்., அரசிடம் அவர் கை நீட்டி பணம் வாங்கி விட்டாரோ என்று சந்தேகம் வரு-கிறது.

தற்போது மழை வந்துவிட்டதால், நாம் காவிரி பிரச்னையை பேச-வில்லை. ஜனநாயகத்தின் மிகப்பெரிய வியாதி மறதியாகும். காவி-ரியில் தண்ணீர் வந்ததால், காவிரி பிரச்னையை நாம் மறந்துவி-டுவோம். இனி அடுத்த வருஷம்தான் வரும். இவ்வாறு கூறினார்.

அவருடன் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி, முன்னாள் எம்.பி., சசிகலா புஷ்பா, நிர்வாகிகள் முருகானந்தம், நாகராஜன், வேதானந்தம் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us