/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விளம்பரம் செய்யப்பட்ட பைகளில் பார்சல் ஹோட்டல் நிர்வாகத்தை எதிர்த்த மனு தள்ளுபடி
/
விளம்பரம் செய்யப்பட்ட பைகளில் பார்சல் ஹோட்டல் நிர்வாகத்தை எதிர்த்த மனு தள்ளுபடி
விளம்பரம் செய்யப்பட்ட பைகளில் பார்சல் ஹோட்டல் நிர்வாகத்தை எதிர்த்த மனு தள்ளுபடி
விளம்பரம் செய்யப்பட்ட பைகளில் பார்சல் ஹோட்டல் நிர்வாகத்தை எதிர்த்த மனு தள்ளுபடி
ADDED : ஜூலை 30, 2024 02:54 AM
சேலம்: விளம்பரம் செய்யப்பட்ட கவர்களில் வழங்கப்பட்ட பார்சலுக்கு, ஹோட்டல் நிர்வாகம் கட்டணம் வசூலித்ததை எதிர்த்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்-யப்பட்டுள்ளது.
கோவை, அன்னுார், குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர், இவர், கடந்த 2023, செப்., 25 ல், பொள்ளாச்சி, உடுமலை சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், இட்லி, வடை பார்சல் வாங்கியுள்ளார். அதற்கான கட்டணமான, 54 ரூபாய் உடன், பார்சல் கட்டணமாக, 3.84 ரூபாய் கூடுதலாக வசூலித்-துள்ளனர்.
பார்சல் செய்யப்பட்ட பொருட்களில், ஹோட்டலின் பெயர், லோகோ அச்சிடப்பட்டிருந்தது. இதனால், பார்சல் கட்டணம் வசூலித்தது தவறு என்றும், நேர்மையற்ற வணிக முறைக்கு, 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோவை நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு, மாநில நுகர்வோர் ஆணையத்தால், சேலம் நுகர்வோர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணைக்கு பின், கடந்த 26 ல், நுகர்வோர் ஆணைய தலைவர் கணேஷ்ராம், உறுப்-பினர் ரவி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
வீட்டிலிருந்து பாத்திரம் கொண்டு வந்தால், பார்சல் கட்டணம் செலுத்த வேண்டாம் என போர்டு வைத்துள்ளதாகவும், உணவு பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றி பார்சல் செய்து தருவ-தாகவும் பேக்கிங்கில் தயாரிப்பு நிறுவனம், பெயர், முகவரி குறிப்-பிட வேண்டும் என விதி உள்ளதாகவும், ஹோட்டல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நியாயமற்ற வர்த்தக முறை என மனுதாரர் நிரூபிக்க தவறியதால், இம்மனு தள்ளுபடி செய்யப்படு-கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.