/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாவட்ட கேரம் போட்டி 75 மாணவர்களுக்கு பரிசு
/
மாவட்ட கேரம் போட்டி 75 மாணவர்களுக்கு பரிசு
ADDED : மே 01, 2024 01:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாவட்ட கேரம் கழகம், ஒய்.எம்.சி.ஏ., இணைந்து, மாவட்ட அளவில் கேரம் போட்டியை நேற்று முன்தினம் தொடங்கின.
பல்வேறு பகுதிகளிலிருந்து, 200க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 11, 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில், ஆண்கள், பெண்கள், சிங்கிள்ஸ், டபுள்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், முதல் மூன்று இடங்களை பிடித்த, 75 மாணவ, மாணவியருக்கு நேற்று மாலை பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் சேலம் கேரம் கழக செயலர் அன்பன் டேனியல், தமிழ்நாடு கேரம் கழக ஆலோசகர் விஜயராஜ், நாசர்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.