/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திராவிட மண்ணில் பா.ஜ.,வால் வெல்ல முடியாது தி.மு.க., சேலம் கிழக்கு மாவட்ட செயலர் பேச்சு
/
திராவிட மண்ணில் பா.ஜ.,வால் வெல்ல முடியாது தி.மு.க., சேலம் கிழக்கு மாவட்ட செயலர் பேச்சு
திராவிட மண்ணில் பா.ஜ.,வால் வெல்ல முடியாது தி.மு.க., சேலம் கிழக்கு மாவட்ட செயலர் பேச்சு
திராவிட மண்ணில் பா.ஜ.,வால் வெல்ல முடியாது தி.மு.க., சேலம் கிழக்கு மாவட்ட செயலர் பேச்சு
ADDED : ஏப் 18, 2024 01:23 AM
ஆத்துார், கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் மலையரசனை ஆதரித்து நேற்று, ஆத்துார், நரசிங்கபுரம் நகர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், உதயசூரியன் சின்னத்துக்கு, தி.மு.க., அதன் கூட்டணி கட்சியினர், ஓட்டு சேகரித்தனர்.
அப்போது சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் பேசியதாவது:
'திராவிட மாடல்' ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள் சென்றடைகின்றன. மகளிர் உரிமைத்திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. வேலை, படிப்பு என பல்வேறு பயணத்துக்கு டவுன் பஸ்களில் செல்வதால் மாதம், 2,000 ரூபாய் மிச்சமாவதாக, பெண்கள் கூறுகின்றனர்.
முதியோர் உதவித்தொகை, 1,200 ரூபாய் வழங்கப்படுகிறது. புதுமைப்பெண் திட்டத்தில் கல்லுாரி படிக்கும் பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. 'நான் முதல்வன்' திட்டத்தில் தனித்திறமையை வளர்த்துக்கொள்கின்றனர். தமிழக உரிமைகளை மீட்பதற்கு, 'இண்டியா' கூட்டணியில் முதல்வர் ஸ்டாலின் இணைந்துள்ளார். பா.ஜ.,வின் 10 ஆண்டு ஆட்சியில், தமிழகத்துக்கு எந்த திட்டமும் வழங்கவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் பிரதமர், மத்திய அமைச்சர்கள் வருகின்றனர். திராவிட மண்ணில், பா.ஜ., வெல்ல முடியாது. ஓட்டு கேட்டு செல்லும்போது அரசின் திட்டங்களை மக்களே பெருமையாக கூறுகின்றனர்.
இத்தேர்தலுக்கு பின், 'இண்டியா' கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் வீடி தேடி வருகின்றன. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், அனைத்து குடும்பங்களுக்கும் அரசு திட்டங்கள் சென்றடைந்துள்ளன. முதல்வர் ஸ்டாலின் கைகாட்டுபவர் தான், இந்தியாவின் பிரதமராக வரமுடியும். தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுவதற்கு மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். தி.மு.க., ஆட்சியில் விவசாயக்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது. விவசாயத்துக்கு தனியே பட்ஜெட் அறிவித்ததும், தி.மு.க., தான். விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டப்
பணிகளை முதல்வர் செய்து வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் நகர செயலர் பாலசுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம், நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், அவைத்தலைவர் மாணிக்கம், இலக்கிய அணி செயலர் முல்லை பன்னீர்செல்வம், கவுன்சிலர் சம்பத், காங்., வி.சி., ம.தி.மு.க., இ.கம்யூ., மா.கம்யூ., நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

