sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏரி மண்ணை விற்கும் தி.மு.க.,வினர் பா.ம.க., - ஊராட்சி தலைவி 'பகீர்'

/

ஏரி மண்ணை விற்கும் தி.மு.க.,வினர் பா.ம.க., - ஊராட்சி தலைவி 'பகீர்'

ஏரி மண்ணை விற்கும் தி.மு.க.,வினர் பா.ம.க., - ஊராட்சி தலைவி 'பகீர்'

ஏரி மண்ணை விற்கும் தி.மு.க.,வினர் பா.ம.க., - ஊராட்சி தலைவி 'பகீர்'


ADDED : ஜூலை 26, 2024 02:11 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி: சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியத்தில், 30க்கும் மேற்-பட்ட ஏரி, குட்டைகளில், உரிய விதிகளை பின்பற்றி வண்டல் மண் அள்ள, விவசாயிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்-ளது. ஆனால் மகுடஞ்சாவடி ஊராட்சியில், தி.மு.க.,வை சேர்ந்த-வர்கள், ஏரி, குட்டைகளில் விதிமீறி மண் அள்ளி விற்பதாக குற்-றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, பா.ம.க.,வை சேர்ந்த, மகுடஞ்சாவடி ஊராட்சி தலைவி மேகலா கூறியதாவது: ஊராட்சிக்குட்பட்ட சொரியாம்-பட்டி ஏரியில், தி.மு.க.,வினர், வண்டல் மண்ணை அள்ளி, விவ-சாயத்துக்கு பயன்படுத்தாமல் டிப்பர் லாரிகள் மூலம் கடத்தி, 'லோடு', 8,000 முதல், 10,000 ரூபாய் வரை, உள்ளூர், வெளி-யூரில் பல்வேறு பயன்பாட்டுக்கு விற்கின்றனர். இதை அறிந்து, மக்கள் உதவியுடன் இன்று(நேற்று) காலை, 11:00 மணிக்கு ஏரிக்கு சென்றபோது, டிப்பர் லாரிகளை அவசரமாக எடுத்துச்-சென்றனர். இதுகுறித்து மகுடஞ்சாவடி பி.டி.ஓ.,வுக்கு தகவல் தெரிவித்தோம். அவர் ஆய்வு செய்துள்ளார். இனி சேலம் கலெக்டர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இத்தகவலை வீடியோவாக பதிவு செய்து வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us