/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆடுகளை கொன்ற நாய்கள்: விவசாயி ஓட்டம்
/
ஆடுகளை கொன்ற நாய்கள்: விவசாயி ஓட்டம்
ADDED : செப் 15, 2024 03:58 AM
மேட்டூர்: கொளத்துார் டவுன் பஞ்சாயத்து, 4வது வார்டு, வால்குறிச்சி விவசாயி நடராஜன், 59. இவர் இரு செம்மறி ஆடுகளை வளர்க்கிறார். அப்பகுதியில் சிறுத்தை சுற்றித்திரிவதால் பாதுகாப்புக்கு ஆடுகளை, நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் கட்டியுள்ளார். நேற்று காலை இரு ஆடுகளை, சின்னராமசாமி ரெட்டி தெருவில் உள்ள ஏரி அருகே மேய்ச்சலுக்கு விட்டார்.
அப்போது அங்கு சுற்றிய, 10க்கும் மேற்பட்ட நாய்கள் ஒன்றாக கூடி, இரு ஆடுகளையும் விரட்டி கடித்தன. தடுக்க முயன்ற நடராஜனையும் நாய்கள் துரத்தியதால், அவர் தப்பி ஓடிவிட்டார். மீண்டும் நாய்கள் இரு ஆடுகளையும் கடித்து கொன்றன. இதையடுத்து கொளத்துார் போலீசார், வருவாய்த்றையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சுதர்ஷன் கூறுகையில், ''நாய்கள் எண்ணிக்கையை குறைக்க கால்நடை பராமரிப்பு துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம். விரைவில் நாய்கள் கட்டுப்படுத்தப்படும்,'' என்றார்.