/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சங்கமேஸ்வரர் கோவிலில் ரூ.16.44 லட்சம் காணிக்கை
/
சங்கமேஸ்வரர் கோவிலில் ரூ.16.44 லட்சம் காணிக்கை
ADDED : மே 30, 2024 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, பவானி சங்கமேஸ்வரர் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் ரமணிகாந்தன் முன்னிலையில், சங்கமேஸ்வரர் சன்னதி, வேதநாயகி அம்மன் சன்னதி, ஆதிகேசவ பெருமாள் சன்னதி உட்பட, 21 நிரந்தர உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில், பக்தர்கள் ரொக்கமாக, 16 லட்சத்து, 44, ஆயிரத்து, 613 ரூபாய் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
மேலும் தங்கம், 38 கிராம், வெள்ளி, 343 கிராம் செலுத்தப்பட்டிருந்தது. உதவி ஆணையர் சுவாமிநாதன் மற்றும் கோவில் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.