/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மனைவியை குத்தி கொன்ற 'போதை' கணவர் கைது
/
மனைவியை குத்தி கொன்ற 'போதை' கணவர் கைது
ADDED : ஜூலை 12, 2024 08:40 PM
காரிப்பட்டி:சேலம், சுக்கம்பட்டியை சேர்ந்த, கட்டட மேஸ்திரி சுரேஷ், 37. இவரது மனைவி இந்துமதி, 32. கொத்து வேலை தொழிலாளியாக பணிபுரிந்தார். இருவரும் இந்துமதியின் தந்தை ஊரான, அயோத்தியாப்பட்டணம், ராம் நகரில் வசித்தனர்.
நேற்று காலை, 6:30 மணிக்கு இந்துமதி வயிற்றில் கத்தியால் குத்தி, சுரேஷ் கொலை செய்தார். இதுகுறித்து அப்பகுதியினர் தகவல்படி, காரிப்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி, சுரேஷை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'இந்துமதியின் நடத்தையில் சந்தேகப்பட்ட சுரேஷ், அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு இந்துமதியை, நெருக்கமாக இருக்க அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்தார். இந்நிலையில் மது போதையில் இருந்த சுரேஷ், நேற்று காலை கத்தியால் இந்துமதி வயிற்றில் குத்தினார். இதில் அவர் உயிரிழந்தார்' என்றனர்.