/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஊட்டி, 'கொடை'க்கு இ - பாஸ் சுற்றுலா வாகனங்கள் 'ஓய்வு'
/
ஊட்டி, 'கொடை'க்கு இ - பாஸ் சுற்றுலா வாகனங்கள் 'ஓய்வு'
ஊட்டி, 'கொடை'க்கு இ - பாஸ் சுற்றுலா வாகனங்கள் 'ஓய்வு'
ஊட்டி, 'கொடை'க்கு இ - பாஸ் சுற்றுலா வாகனங்கள் 'ஓய்வு'
ADDED : மே 15, 2024 08:45 PM
மேட்டூர்:ஊட்டி, கொடைக்கானல் செல்ல, இ - பாஸ் நடைமுறைக்கு வந்துள்ளதால் மேட்டூர் பகுதி சுற்றுலா வாகனங்கள், பயணியர் வராததால், 'ஓய்வு' எடுக்கின்றன.
நீலகிரி மாவட்டம் ஊட்டி; திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு செல்ல, இ - பாஸ் முறையை, வட்டார போக்குவரத்து அலுவலகம் நடைமுறைப்படுத்தி உள்ளது. இதனால் சுற்றுலா வாகனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சேலம் மாவட்டம் மேட்டூர் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் கறியதாவது:
சுற்றுலா செல்வதற்கு உபயோகப்படுத்தும் பெரிய வேன்களில், 12 பேர் செல்ல, அரசு அனுமதித்துள்ளது. அந்த வேன்களில், 20 முதல், 25 பயணியரை ஏற்றிச்செல்வோம். இதன்மூலம் பயணியர் சுற்றுலா செலவு வெகுவாக குறையும்.
தற்போது இ - பாஸ் முறையால், அரசு நிர்ணயித்த பயணியரை மட்டுமே ஏற்றி செல்ல வேண்டியுள்ளது. அதற்கான வேன் வாடகையை குறைந்த பயணியர் பகிர வேண்டியுள்ளதால், அவர்கள் இரு சுற்றுலா தலங்களுக்கு செல்லவே தயங்குகின்றனர். இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் சாலையோரம் நிறுத்தி வைத்துள்ளோம். அரசின் உத்தரவால் வாகன உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.