/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மோசடி வழக்கில் சிக்கிய கல்வி அலுவலர் 'சஸ்பெண்ட்'
/
மோசடி வழக்கில் சிக்கிய கல்வி அலுவலர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஆக 05, 2024 10:49 PM
சேலம்:மோசடி வழக்கில் சிக்கிய, மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
சேலம், அம்மாபேட்டை, காமராஜர் காலனியை சேர்ந்தவர் பூங்கொடி, 37, நர்சிங் படித்துள்ளார். கடந்த, 2022ல், இவரிடம் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர் தமிழரசன், 59, வேலைவாங்கி தருவதாக கூறி, 15 லட்சம் ரூபாய் வாங்கியதாகவும், வேலை வாங்கி தராத நிலையில், பணத்தை திருப்பி கேட்டபோது மிரட்டல் விடுத்ததாகவும் போலீசில் பூங்கொடி புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில், அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தமிழரசன் மீது, மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், இயக்குனரகத்துக்கு அறிக்கை அனுப்பினார். இதையடுத்து, இணை இயக்குனர் ராஜேந்திரன், தமிழரசனை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார்.