/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மா.திறன் குழந்தைகள் ஏற்காடுக்கு கல்வி சுற்றுலா
/
மா.திறன் குழந்தைகள் ஏற்காடுக்கு கல்வி சுற்றுலா
ADDED : மார் 12, 2025 08:46 AM
சேலம்: மாற்றுத்திறனாளி திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி சுற்றுலா தொடக்க நிகழ்ச்சி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெகடர் பிருந்தாதேவி தொடங்கி வைத்து பேசியதாவது:
தமிழக அரசால் மாற்றுத்திறனாளி நலனுக்கு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, கிராமப்புறங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்படும் உதவி, திட்டம், உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்ட அளவில் தெருமுனை நாடகங்கள் நடத்த, இந்நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவி, திருமண உதவித்தொகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்படுகின்றன.
மாற்றுத்திறனாளி குழந்தைகள் கல்வி சுற்றுலா செல்லும்படி, 5 வயதுக்குட்பட்ட, 30 குழந்தைகளை, ஒரு நாள் சுற்றுலாவாக ஏற்காடு படகு இல்லம், அண்ணா பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பாதுகாப்புடன் அழைத்துச்சென்று அவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவும்படி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மகிழ்நன் உள்பட பலர் பங்கேற்றனர்.