/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அடுக்குமாடி குடியிருப்பில் தீ மூச்சுத்திணறி மூதாட்டி பலி
/
அடுக்குமாடி குடியிருப்பில் தீ மூச்சுத்திணறி மூதாட்டி பலி
அடுக்குமாடி குடியிருப்பில் தீ மூச்சுத்திணறி மூதாட்டி பலி
அடுக்குமாடி குடியிருப்பில் தீ மூச்சுத்திணறி மூதாட்டி பலி
ADDED : ஜூன் 25, 2024 01:54 AM
சேலம்: அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 7 இரு சக்கர வாகனங்கள் எரிந்தன. மூதாட்டி ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
சேலம் ஜான்சன்பேட்டை பகுதியில் உள்ள, எட்டு வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் தீப்பிடித்து, புகை கிளம்பியது. குடியிருப்போர் அணைப்பதற்குள், அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற இரு சக்கர வாகனங்களில் தீ பரவியது. அஸ்தம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சென்று, தீயை அணைத்தனர். அதற்குள் ஏழு இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்தன. புகை காரணமாக, அங்குள்ள வீட்டில் இருந்த தனலட்சுமி, 80, என்ற மூதாட்டிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.