/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குடிநீர் திட்டப்பணிக்கு மின் கம்பத்தில் 'கொக்கி' போட்டு மின்சாரம் திருட்டு
/
குடிநீர் திட்டப்பணிக்கு மின் கம்பத்தில் 'கொக்கி' போட்டு மின்சாரம் திருட்டு
குடிநீர் திட்டப்பணிக்கு மின் கம்பத்தில் 'கொக்கி' போட்டு மின்சாரம் திருட்டு
குடிநீர் திட்டப்பணிக்கு மின் கம்பத்தில் 'கொக்கி' போட்டு மின்சாரம் திருட்டு
ADDED : ஜூலை 18, 2024 08:36 PM
தலைவாசல்:சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி, சிவன் கோவில் தெரு பகுதியில், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், 6.50 லட்சம் ரூபாயில், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. குழாய் பதிப்பதற்காக, கான்கிரீட் சாலையில் பள்ளம் தோண்டும் பணிகளுக்கு, மின்சாரத்தில் இயங்கும் டிரில்லர் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரம் பயன்படுத்துவதற்கு, தெருவில் உள்ள மின் கம்பத்தில் கொக்கி போட்டு, மின்சாரத்தை திருடுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தலைவாசல் ஊராட்சி தலைவர் ஆறுமுகம் கூறுகையில், ''குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்கு, தெரு விளக்கு மின் கம்பத்தில் ஒயர் போட்டு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. மின்வாரிய அலுவலர்கள், இதுபோன்று செய்யக்கூடாது என்றனர். இதையடுத்து, தெரு விளக்கிற்கு பயன்படுத்தும் மின் மீட்டரில், ஒயர் இணைப்பு கொடுத்து, மின்சாரம் எடுத்து, இயந்திரம் இயக்கப்படுகிறது. உள்ளூர் பிரச்னை காரணமாக, இதுபோன்ற பொய்யான தகவல் கூறி வருகின்றனர்,'' என்றார்.
ஆத்துார் கோட்ட செயற்பொறியாளர் ராணி கூறுகையில், ''குழாய் பதிக்கும் பணிகளுக்கு, மின்சாதன இயந்திரங்கள் இயக்குவதற்கு, மின் கம்பத்தில் கொக்கி போடப்பட்டுள்ள புகார் குறித்து, விசாரணை செய்யப்படுகிறது. முன் அனுமதி மற்றும் மின்வாரியத்திற்கு பணம் செலுத்தி, மின்சாரம் பயன்படுத்துகின்றனரா என, அலுவலர்களிடம் கேட்டறிந்து, விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.