ADDED : மார் 22, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,;ஆர்.சி.செட்டிப்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார், 23.
இவர், 1.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'யமஹா ஆர் 15' பைக்கை, கடந்த, 17ல், மெய்யனுார் சாலையில் நிறுத்தி விட்டு நண்பரை பார்க்க சென்றார். திரும்பி வந்தபோது பைக்கை காணவில்லை. அவர் புகார்படி பள்ளப்பட்டி போலீசார் விசாரித்து, அன்னதானப்பட்டி, ராமையன் காட்டை சேர்ந்த செல்வராஜ், 23, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

