/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துணைவேந்தர் பணி நீட்டிப்பு; பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
துணைவேந்தர் பணி நீட்டிப்பு; பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
துணைவேந்தர் பணி நீட்டிப்பு; பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
துணைவேந்தர் பணி நீட்டிப்பு; பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 02, 2024 05:24 AM
ஓமலுார் : சேலம், பெரியார் பல்கலை துணைவேந்தராக இருந்த ஜெகநாதன் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஐ.ஏ.எஸ்., அதிகாரி பழனிசாமி தலைமையிலான இருவர் கொண்ட குழு விசாரணை நடத்தியது. அதில், முன்னாள் பதிவாளர் தங்கவேல், துணைவேந்தர் ஜெகநாதன் மீது ஊழல் குற்றச்சாட்டு புகார் நிரூபணமானதாக, அரசுக்கு அறிக்கை அளித்தனர்.
துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலம் கடந்த ஜூன் 30ல் முடிவடைந்தது. தமிழக கவர்னர் ரவி, ஜெகநாதனுக்கு மீண்டும் ஓராண்டு பணி நீட்டித்து உத்தரவு வழங்கினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர் நேற்று மாலை, பல்கலை நுழைவாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், ஊழல் புகாரில் சிக்கியுள்ள துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும் என, கோஷம் எழுப்பினர். பல்கலை ஆசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதன், தொழிலாளர் சங்க பொதுச்செயலர் சக்திவேல் உட்பட, நுாற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.