/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.12 லட்சம் பறிப்பு 4 தனிப்படை விசாரணை
/
ரூ.12 லட்சம் பறிப்பு 4 தனிப்படை விசாரணை
ADDED : ஜூன் 16, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்தவர் யுவராஜ், 41. தலைவாசல், நாவக்குறிச்சியை சேர்ந்தவர் குமார், 27. தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் இவர்களிடம், உடையாப்பட்டி அருகே நேற்று முன்தினம் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த, 6 பேர், 12 லட்சம் ரூபாயை பறித்துச்சென்றனர்.
ஊழியர்கள் புகார்படி அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
தொடர்ந்து உதவி கமிஷனர் செல்வம், இன்ஸ்பெக்டர் பால்ராஜ் அடங்கிய, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள், கொள்ளையர்கள் தப்பிய இடத்தில் இருந்த கேமராக்களை பார்வையிட்டு வருகின்றனர். அதேநேரம் நிதி நிறுவன ஊழியர்கள் மீதும்
சந்தேகப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.