/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வறட்சியால் பயிர் சாகுபடி பாதிப்பு கிணற்றை ஆழப்படுத்தும் விவசாயிகள்
/
வறட்சியால் பயிர் சாகுபடி பாதிப்பு கிணற்றை ஆழப்படுத்தும் விவசாயிகள்
வறட்சியால் பயிர் சாகுபடி பாதிப்பு கிணற்றை ஆழப்படுத்தும் விவசாயிகள்
வறட்சியால் பயிர் சாகுபடி பாதிப்பு கிணற்றை ஆழப்படுத்தும் விவசாயிகள்
ADDED : ஏப் 28, 2024 04:05 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் வேளாண், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
தற்போது நிலவும் வறட்சியால் விவசாய கிணறுகள், ஆழ்துளை குழாய் கிணறுகள் வறண்டு, குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பா.ஜ.,வின், சேலம் கிழக்கு மாவட்ட விவசாய பிரிவு துணைத்தலைவர் வெங்கடேஷ்பாபு கூறியதாவது:
தும்பல்பட்டி, சாமகுட்டப்பட்டி, வேடப்பட்டி, அடிமலைப்பட்டி, குள்ளப்பநாயக்கனுார் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய கிணறுகளின் நீர்மட்டம், 100 அடிக்கு கீழ் சென்று விட்டது. தினமும், 10 நிமிடம் மட்டும் கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்க முடிகிறது.
தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் வாடி, வதங்கி காய்கின்றன. 1,200 அடி ஆழம் ஆழ்துளை குழாய் கிணறு அமைத்தாலும் தண்ணீர் கிடைக்கவில்லை. விவசாயிகள் வறட்சிக்கு மத்தியில் கடன் வாங்கி, கிணற்றை ஆழப்படுத்தியும், ஆழ்துளை குழாய் கிணறு அமைத்தும் வருகின்றனர். இன்னும் சில நாட்களில் மழை பெய்யவில்லை என்றால், குடிக்க தண்ணீர் கூட கிடைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.