/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மதகை சேதப்படுத்திய பொக்லைனை போலீசில் ஒப்படைத்த விவசாயிகள்
/
மதகை சேதப்படுத்திய பொக்லைனை போலீசில் ஒப்படைத்த விவசாயிகள்
மதகை சேதப்படுத்திய பொக்லைனை போலீசில் ஒப்படைத்த விவசாயிகள்
மதகை சேதப்படுத்திய பொக்லைனை போலீசில் ஒப்படைத்த விவசாயிகள்
ADDED : ஆக 17, 2024 04:41 AM
ஆத்துார்: ஏரியின் மதகு சேதப்படுத்திய பொக்லைனை சிறைபிடித்து, ஆத்துார் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் ஒப்படைத்தனர்.
ஆத்துார் அருகே, துலுக்கனுார் கிராமத்தில், நத்திசாகிப் ஏரி உள்-ளது. இந்த ஏரியின் நீர் வெளியேறும் மதகு பகுதியில் நேற்று, பொக்லைன் உதவியுடன் சிலர் சேதப்படுத்தியுள்ளனர். அதைய-றிந்த அப்பகுதி விவசாயிகள், 100க்கும் மேற்பட்டோர் மதகு மற்றும் நீர் வழிப்பாதையை சேதப்படுத்திய பொக்லைன் வாக-னத்தை சிறைபிடித்து, அவற்றை ஆத்துார் தாலுகா அலுவலகத்-துக்கு கொண்டு வந்தனர்.
அந்த வாகனத்தை மீட்ட வருவாய்த்துறையினர், 'மதகு சேதம் குறித்து ஆய்வு செய்வதுடன், அவற்றை சேதப்படுத்தியவர்கள் மீதும், பொக்லைன் வாகனம் குறித்தும், போலீசார் மூலமாக நட-வடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்தனர். விவசாயிகள் கொண்டு வந்த பொக்லைன் வாகனத்தை, ஆத்துார் டவுன் போலீசில் வருவாய்த்துறையினர் ஒப்படைத்தனர்.