/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பத்திரப்பதிவு தடையை நீக்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
பத்திரப்பதிவு தடையை நீக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : செப் 05, 2024 02:57 AM
ஓமலுார்: சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு காமலாபுரம், சிக்கனம்பட்டி, தும்பிப்பாடி, பொட்டிபுரம் கிராமங்களில், 560 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த, வருவாய்த்துறையினர் நில அளவீடு பணியை முடித்துள்ளனர்.
அடுத்த கட்டமாக நிலத்தை கையகப்படுத்தும் பணியில் இறங்குவதற்கு அந்தந்த கிராம மக்களிடம் பேச்சு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நில எடுப்பு தாசில்தார் காந்தி தேசாய் தலைமையில் தும்பிப்பாடி சமுதாயக்கூடத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் நில கையகப்படுத்தும் சட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்து பேசினர்.பின் அப்பகுதி விவசாயிகள், நில வழிகாட்டி மதிப்பை அதிகரித்து வழங்க வேண்டும்; எங்களுக்கு நிலங்கள், சொத்துகள் இருந்தும், பத்திரங்களை எதுவும் செய்ய முடியாதபடி தடை செய்துள்ளீர்கள். அதை நீக்க கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் கூறினர்.