/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'தோல்வி பயத்தில் சேலம் தி.மு.க.,வேட்பாளர் பிதற்றுகிறார்' அ.தி.மு.க., சேலம் புறநகர் மா.செ., இளங்கோவன் பிரசாரம்
/
'தோல்வி பயத்தில் சேலம் தி.மு.க.,வேட்பாளர் பிதற்றுகிறார்' அ.தி.மு.க., சேலம் புறநகர் மா.செ., இளங்கோவன் பிரசாரம்
'தோல்வி பயத்தில் சேலம் தி.மு.க.,வேட்பாளர் பிதற்றுகிறார்' அ.தி.மு.க., சேலம் புறநகர் மா.செ., இளங்கோவன் பிரசாரம்
'தோல்வி பயத்தில் சேலம் தி.மு.க.,வேட்பாளர் பிதற்றுகிறார்' அ.தி.மு.க., சேலம் புறநகர் மா.செ., இளங்கோவன் பிரசாரம்
ADDED : ஏப் 02, 2024 04:12 AM
ஓமலுார்: தோல்வி பயத்தில், தி.மு.க.,வேட்பாளர் செல்வ
கணபதி பிதற்றுகிறார் என, அ.தி.மு.க., சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தேர்தல் பிரசாரம் செய்தார்.
சேலம் லோக்சபா அ.தி.மு.க.,வேட்பாளர் விக்னேஷ். நேற்று வீரபாண்டி மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியம் பகுதிகளில் இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தார். அவருக்கு ஆதரவாக, அ.தி.மு.க., சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், வீரபாண்டி எம்.எல்.ஏ.,ராஜமுத்து ஆகியோர் வீதி, வீதியாக சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
எஸ்.பாப்பாரப்பட்டி பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வேட்பாளர் விக்னேஷுக்கு மேளம், தாளம் முழங்க ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதில் வேட்பாளர் விக்னேஷ் பெண்கள், முதியோர்கள் காலில் விழுந்து ஆசி பெற்று, இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தார். அங்கு மாவட்ட செயலர் இளங்கோவன் பிரசாரத்தில் பேசியதாவது:
இளம் வாலிபரான வேட்பாளர் விக்னேஷ், உங்கள் வீட்டுப்பிள்ளை. அ.தி.மு.க., தொண்டர்கள் ரத்தத்தை வேர்வையாக சிந்தி அமைச்சராகவும், எம்.பி.,யாகவும் அடையாளம் தரப்பட்ட செல்வகணபதி எதிரணியில் உள்ளார். அ.தி.மு.க., இயக்கத்துக்கு துரோகம் இழைத்தவர் சேலம் தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதி. அவரை ஓட, ஓட விரட்டியடிக்க வேண்டும். சென்ற இடமெல்லாம் அ.தி.மு.க.,வுக்கு கூட்டம் கூடுவதை கண்டு அஞ்சி, நடுங்கி அ.தி.மு.க.,வினரிடையே கெஞ்சுகிறார்.
கடந்த, 3 ஆண்டுகால ஆட்சியில் தி.மு.க., செய்த சாதனைகளை கூறி ஓட்டு கேட்க முடியாமல், தோல்வி பயத்தால் செல்வகணபதி பிதற்றுகிறார். கோவையில், 1,000 ரூபாய் கிடைக்காத பெண்மணி, முதல்வர் ஸ்டாலின் கையை பிடித்துக்கொண்டு, ஏன் கொடுக்கவில்லை என கேள்வி கேட்டுள்ளார். பெண்களை ஏமாற்றியது அரசு தி.மு.க. அ.தி.மு.க., ஆட்சியில் வீரபாண்டி தொகுதியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. உயர்மட்ட மேம்பாலம், 650 கோடியில் குடிநீர் விரிவாக்கப்பணி, நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் போன்ற பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசை வலியுறுத்தி வருங்காலத்தில், பெண்களுக்கு உரிமை தொகையாக, 3,000 ரூபாய் வழங்கப்படும். இது தர்மத்துக்கு, அதர்மத்துக்கு நடைபெறும் தேர்தல். அனைவரும் இரட்டை இலைக்கு ஓட்டளித்து விக்னேஷை அதிகப்படியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,மனோன்மணி, வீரபாண்டி மேற்கு ஒன்றிய செயலர் வருதராஜ், கிழக்கு ஒன்றிய செயலர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இன்று, அ.தி.மு.க.வேட்பாளர் விக்னேஷ் சேலம் வடக்கு தொகுதிக்குட்பட்ட அஸ்தம்பட்டி பகுதி -1, பகுதி -2 ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்
கொள்ளவுள்ளார்.

