/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின்மாற்றி பணிமனையில் தீ தடுப்பு விழிப்புணர்வு
/
மின்மாற்றி பணிமனையில் தீ தடுப்பு விழிப்புணர்வு
ADDED : ஏப் 09, 2024 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்;மேட்டூர், மின்மாற்றி பணிமனையில் தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.மேட்டூர் அணை அடிவாரம் மின் பணிமனை உள்ளது.
இங்கு மின்மாற்றிகள் தயாரித்து மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இங்கு, 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் மின்மாற்றி தயாரிக்கும் பணியின் போது தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.அவ்வாறு ஏற்பட்டால், அதனை எவ்வாறு தடுப்பது என நேற்று காலை நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில், மேட்டூர் தீயணைப்பு குழு சார்பில் பணிமனை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

