நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர் : மேட்டூர் அடுத்த தமிழக - கர்நாடகா எல்லை வழியே பாய்ந்து, காவிரியில் கலக்கும் துணை ஆறுகளில் ஒன்றான பாலாறு பகுதிகளில், இரு நாட்களாக கோடை மழை பெய்தது.
இதனால் ஈரோடு மாவட்டம் பவானி, கதியத்துாரில் உற்பத்தியாகி அந்தியூர், பர்கூர், தட்டக்கரை, சென்னப்பட்டி ஆகிய வனச்சரகங்களை கடந்து, 130 கி.மீ.,க்கு, தமிழக - கர்நாடகா எல்லை வழியே பாயும் பாலாறு, காவிரியில் கலக்கிறது.
இந்த ஆற்றில் நேற்று செந்நிறமாக தண்ணீர் பெருக்கெடுத்து சென்று தமிழக - கர்நாடகா எல்லையில் உள்ள காவிரியாற்றில் கலந்தது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்தது.