ADDED : மே 30, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், ஏற்காட்டில், 47வது கோடைவிழா, மலர் கண்காட்சி கடந்த, 22ல் தொடங்கியது. பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 26ல் கோடைவிழா நிறைவு பெற்றது.
மலர் கண்காட்சி, 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து பார்த்து ரசிக்கின்றனர். இந்நிலையில் இன்றுடன் மலர் கண்காட்சி இன்று நிறைவு பெற உள்ளது. கடைசி நாளான இன்று, ஏராளமானோர், மலர் கண்காட்சியை கண்டுகளிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.