/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நாய்களுக்கு 'டிரோன்' மூலம் உணவு
/
காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நாய்களுக்கு 'டிரோன்' மூலம் உணவு
காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நாய்களுக்கு 'டிரோன்' மூலம் உணவு
காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நாய்களுக்கு 'டிரோன்' மூலம் உணவு
ADDED : ஆக 05, 2024 06:49 AM
மேட்டூர்: வெள்ளத்தின் நடுவில் சிக்கிய நாய்களுக்கு, 'டிரோன்' மூலம் உணவு வழங்கப்பட்டது.
மேட்டூர் அணை கடந்த, 30ம் தேதி நிரம்பி உபரிநீர் வெளியேற்-றப்பட்டது. உபரிநீர் வெளியேறும் காவிரி நடுவே உள்ள கரட்டில், நான்கு நாய்கள் சிக்கிக்கொண்டன. அவற்றுக்கு கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவுப்படி, தீயணைப்பு, மீட்பு குழு-வினர், 'டிரோன்' மூலம் மூன்று நாட்களாக உணவு வழங்கினர். நாய்களை மீட்க சென்னை 'ெஹவன் பார் அனிமல்' அறக்கட்-டளை சார்பில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது நாய்களுக்கு உரிய உணவு வழங்குவதாக, வருவாய் துறை சார்பில் வக்கீல் தெரிவிக்கவே, ஆக., 6ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அறக்கட்டளையை சேர்ந்த செந்தமிழ், மேட்டூருக்கு நேற்று வந்தார். 16 கண் மதகு பகுதிக்கு சென்று நாய்கள் தவிக்கும் இடத்தை
பார்வையிட்டார். அவர் கூறுகையில், ''டிரோனில் அனுப்பி வைக்-கப்பட்ட உணவை, ஒரு நாய் மட்டும் சாப்பிட்டது. இதர நாய்கள் அங்குள்ளதா அல்லது நீந்தி கரை சேர்ந்ததா என தெரியவில்லை. நாய்கள் தவிக்கிறதா என்பதை உறுதி செய்த பின், எனது அறிக்-கையை, அறக்கட்டளை நிறுவனருக்கு வழங்குவேன்,'' என்றார்.
அதேநேரம் முதல் நாளில் இருந்த கறுப்பு நிற நாய் இல்லை. அது வேறிடத்துக்கு சென்று விட்டதா என தீயணைப்பு குழு-வினர், பாதுகாப்பு உடை அணிந்து அப்பகுதிக்கு சென்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.