ADDED : மே 24, 2024 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல் : சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஆறகளூரை சேர்ந்த வையாபுரி மனைவி ராஜம்மாள், 84. இவர், 1980ல் அப்போதைய தலைவாசல் சட்டசபை தொகுதியில்(தற்போது கெங்கவல்லி) காங்., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984ல் மீண்டும் வெற்றி பெற்றார்.
பின், காங்., கட்சியில் விலகிய அவர், ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தார். 1989ல், அ.தி.மு.க., இரண்டாக பிரிந்தபோது, ஜெயலலிதா அணியில் தலைவாசல் தொகுதியில், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் வயது முதிர்வு, உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு, 11:45 மணிக்கு காலமானார். அவரது உடலுக்கு, அ.தி.மு.க., - தி.மு.க., - காங்., உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர், மக்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர்.