ADDED : ஜூலை 25, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம், சின்னதிருப்பதி, பள்ளக்காட்டை சேர்ந்த, சிவில் இன்ஜினியர், வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது 'வாட்ஸாப்' எண்ணில் பேசிய நபர், 'பகுதி நேர வேலை, பங்குச்சந்தையில் முதலீடாக, 50 லட்சம் ரூபாய் கட்டினால், 1 கோடி ரூபாய் கிடைக்கும்' என்றார். அதை நம்பிய சிவில் இன்ஜினியர், 50 லட்சம் ரூபாயை செலுத்தினார். அதன் பின், மர்ம நபர் பேசிய மொபைல் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இன்ஜினியர், சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அவர் பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை போலீசார் ஆய்வு செய்து, 27 லட்சம் ரூபாயை முடக்கினர்.
அந்த பணத்தை, இன்ஜினியர் வங்கி கணக்குக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.