/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு 'இலவச புத்தக' பை வருகை
/
துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு 'இலவச புத்தக' பை வருகை
துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு 'இலவச புத்தக' பை வருகை
துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு 'இலவச புத்தக' பை வருகை
ADDED : மே 28, 2024 07:25 AM
ஓமலுார்: அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள, இலவச புத்தக பை வட்டார கல்வி அலுவலகத்துக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின், ஜூன், 6 முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள், பள்ளி திறந்த பின் கல்வி செயல்பாடுகள் குறித்த வழிமுறைகளை, நேற்று முன்தினம் அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு அரசு சார்பில், சிறியது, மீடியம், பெரியது என மூன்று அளவுகளை கொண்ட, இலவச புத்தக பை வழங்கப்படுகிறது.
அவை தயார் செய்யப்பட்டு, வட்டார கல்வி அலுவலகத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டுள்ளது. ஓமலுார் வட்டாரத்தில் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி என, 94 பள்ளிகள் உள்ளது. அங்கு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய புதிய புத்தக பைகள் அடங்கிய, 140 பெட்டிகள், ஓமலுார் வட்டார கல்வி அலுவலகத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான பாட புத்தகங்கள் நேற்று லாரியில் வந்தது. கடந்த வாரம், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான பாட புத்தகங்கள் சேலம் வந்தடைந்தது. தொடர்ந்து நேற்று ஆறு முதல், 10ம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்கள் லாரியில் வந்தன. இந்த புத்தகங்களை, பள்ளிகள் வாரியாக அனுப்பும் பணியை அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.
ஜூன், 1க்குள் அனைத்து பாட புத்தகங்களும் பள்ளிகளை சென்றடையும் எனவும், பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.