/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
/
நாளை குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
ADDED : மே 28, 2024 07:30 AM
சேலம்: சேலம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், நாளை காலை, 10:30 மணிக்கு குரூப் 1, முதல்நிலை தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. சிறந்த வல்லுனர்களை கொண்டும், பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்குவதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை, 0427 2401750 எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்க மாநாடு
ஆத்துார்: ஆத்துார் தலைமை தபால் நிலைய அலுவலகத்தில், நேற்று அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்க 26வது கிளை மாநாடு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
முன்னாள் அகில இந்திய துணை பொதுச் செயலர் அமிர்தலிங்கம் தலைமை வகித்தார். இதில், காலியாக உள்ள பதவிகளுக்கு வெளியாட்களை கொண்டு நிரப்பக்கூடாது. பணி மூப்பு அடிப்படையில் பணி நிரப்ப வேண்டும். தபால்காரர்களுக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை என்று மாதம், 2,500 ரூபாய் பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.
புதிய நிர்வாகிகளாக தலைவர் வேலு, செயலர் பாலமுருகன், நிதி செயலர் செந்தில்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், முன்னாள் மாநில உதவி தலைவர் லோகநாதன், கோட்ட தலைவர் பெருமாள், கோட்ட செயலர் செல்வம், நிர்வாகிகள் மாதேஸ்வரன், துரைபாண்டியன், கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.