/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'ராம்கோ' நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
/
'ராம்கோ' நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
ADDED : மே 05, 2024 01:50 AM
வாழப்பாடி:வாழப்பாடி,
சிங்கிபுரம் ராம்கோ சிமென்ட் தொழிற்சாலை நிறுவனர் ராமசாமி ராஜா,
130-து பிறந்த தினத்தையொட்டி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை,
சேலம் அம்மாபேட்டை திரு நரம்பியல் மருத்துவமனை இணைந்து, வாழப்பாடி
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நேற்று இலவச கண் சிகிச்சை, பொது
மருத்துவ முகாமை நடத்தின.
ராம்கோ நிறுவன துணைத் தலைவர் துரை சிங்கராஜா தலைமை வகித்தார். பணியாளர் துறை மேலாளர் மணிவேல் வரவேற்றார்.
வாழப்பாடி
வட்டார ஆத்மா குழு தலைவர் சக்கரவர்த்தி, ராம்கோ கணக்கு துறை
மேலாளர் சுரேஷ்குமார், தலைமையாசிரியை சத்தியக்குமாரி,
குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.
இதில், 180 பேர் கண் பரிசோதனை, 320 பேர் முழு உடல் பரிசோதனை, சிகிச்சை பெற்றனர்.
ராம்கோ அலுவலர்கள்
முனியசாமி, ஏழுமலை, வடிவேல், மகாலிங்கம், சுபாஷ், கார்த்திகேயன், மயில்சாமி ஆகியோர், முகாம்
ஏற்பாடுகளை செய்திருந்தனர்.