/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏரிக்கரை பகுதியில் குப்பை கொட்டி எரிப்பு
/
ஏரிக்கரை பகுதியில் குப்பை கொட்டி எரிப்பு
ADDED : ஏப் 28, 2024 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி: தப்பக்குகுட்டை ஊராட்சி சின்னமாரியம்மன் கோவில் அருகே உள்ள ஏரிக்கரை பகுதியில், தறிக்கூட மெட்டாலிக் கழிவு, கோழி இறைச்சி உள்ளிட்ட குப்பையை பலரும் கொட்டுகின்றனர். அதற்கு தீ வைத்து எரித்து விடுகின்றனர்.
இதனால் அப்பகுதியில் வசிக்கும், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அவதிக்கு ஆளாகின்றனர். குறிப்பாக குழந்தைகள், முதியோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து மக்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இனியாவது குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

