/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சென்றாய பெருமாள் கோவில் தேர் திருவிழா கோலாகலம்
/
சென்றாய பெருமாள் கோவில் தேர் திருவிழா கோலாகலம்
ADDED : ஜூன் 09, 2024 04:34 AM
வாழப்பாடி: வாழப்பாடியில், சென்றாய பெருமாள் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.
வாழப்பாடி, அக்ரஹாரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சென்றாய பெருமாள் கோவில் தேர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
நடப்பாண்டு திருவிழா கடந்த, 11ல் தண்டலுக்கு மாடு படைத்தல், 29ல் காப்பு கட்டுதல், கொடியேற்றுதல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் கணபதி ஹோமம், புதிய தேருக்கு கண் திறப்பு, சாமிக்கு திருக்கல்யாணம், சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று காலை, 6:00 மணிக்கு தேர் நிலைபெயர்த்தல், பொங்கல் வைத்தல், வேண்டுதல் நிறைவேற்றுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. பின் மாலை, 3:00 மணியளவில் கோவிலில் இருந்து தேர் புறப்பட்டு, நல்லதம்பி கவுண்டர் தெரு, வைத்திய படையாச்சி தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வாழப்பாடி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இன்று சத்தாபரணம், வாணவேடிக்கையுடன் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மஞ்சள் நீராடுதல் நடைபெறுகிறது.