/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேற்கூரை தொங்குது; குப்பை வண்டியால் நாறுது; இரவில் 'பார்' ஆக மாறுது... இதுதாங்க... சத்திரம் அம்மா உணவகம்
/
மேற்கூரை தொங்குது; குப்பை வண்டியால் நாறுது; இரவில் 'பார்' ஆக மாறுது... இதுதாங்க... சத்திரம் அம்மா உணவகம்
மேற்கூரை தொங்குது; குப்பை வண்டியால் நாறுது; இரவில் 'பார்' ஆக மாறுது... இதுதாங்க... சத்திரம் அம்மா உணவகம்
மேற்கூரை தொங்குது; குப்பை வண்டியால் நாறுது; இரவில் 'பார்' ஆக மாறுது... இதுதாங்க... சத்திரம் அம்மா உணவகம்
ADDED : ஜூலை 26, 2024 02:12 AM
சேலம்: சத்திரம் அம்மா உணவக மேற்கூரை சேதம் அடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. அங்கேயே குப்பை வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இரவில் மது அருந்தும் இடமாக சிலர் பயன்படுத்துகின்றனர். இதனால் ஒட்டுமொத்தமாக அம்மா உணவக பராமரிப்பில், 'கோட்டை' விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2013ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால், அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. அங்கு இட்லி, 1 ரூபாய், சாம்பார் சாதம், 5 ரூபாய், தயிர் சாதம், 3 ரூபாய் என, குறைந்த விலையில் வழங்கப்பட்டதால் ஏழை மக்கள் பயன்பெற்றனர். சேலம் மாவட்டத்தில், 15 அம்மா உணவகங்கள் செயல்படுகின்-றன. அதில் சேலம், சத்திரத்தில் உள்ள உணவகத்தில் தினமும், 500க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டு வந்தனர். சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி உணவகம் செயல்படுவதால், வாடிக்கை-யாளர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் உணவு வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த நிலை மாறிவிட்-டது.
குறிப்பாக மேற்கூரை சேதமடைந்து, எந்த நேரத்திலும் விழுந்து-விடும் என்ற அச்சம், வாடிக்கையாளருக்கு உள்ளது. மின்விசி-றிகள் கூட சரிவர இயங்குவதில்லை. தவிர மாநகராட்சி பகுதி-களில் திடக்கழிவு சேகரிக்கும் வாகனங்களை, உணவக வளா-கத்தில் நிறுத்தி வைப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. சிலர் இரவில், மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதோடு, போதையில் அங்கேயே விழுந்து கிடக்கின்றனர். இதனால் பெண்கள் உணவகத்துக்கு வரவே அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து சத்திரத்தை சேர்ந்த சுப்பிரமணி கூறுகையில், ''தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், அம்மா உணவக பராமரிப்-புக்கு நடவடிக்கை இல்லை. உணவில் பருப்பு சேர்ப்பது குறைந்-துவிட்டது. முன்பு அம்மா உணவகத்தில் சாப்பிட அனைத்து தரப்-பினரும் வந்தனர். தற்போது மூட்டை துாக்குவோர், கூலி தொழி-லாளர் மட்டும் வருகின்றனர். முறையாக பராமரித்து, தரமான உணவு வழங்க வேண்டும்,'' என்றார்.
இதுகுறித்து சத்திரம் பிரசாத் கூறுகையில், ''குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. உணவகத்துக்கு தேவையான பொருட்களும் சரிவர வருவதில்லை. கூலி வேலை செய்யும் எங்-களை போன்றோருக்கு அம்மா உணவகம் தான் கைகொடுத்தது. தற்போது தரமற்ற முறையில், சுகாதார சீர்கேடு நிறைந்த இட-மாக, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்,'' என்றார்.
மாநகராட்சி துணை கமிஷனர் அசோகன் கூறுகையில், ''தரமா-கவே உணவு வழங்குகிறோம். சத்திரம் அம்மா உணவகத்தில் குறை இருப்பின் உடனே நிவர்த்தி செய்யப்படும். மேற்கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சரிசெய்து, சமூக விரோதிகள் நுழையாதபடி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.