/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழில் முனைவோராக மேம்படுத்த உதவி மையம்
/
தொழில் முனைவோராக மேம்படுத்த உதவி மையம்
ADDED : ஆக 04, 2024 01:13 AM
வீரபாண்டி, வீரபாண்டி ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள இ - சேவை மைய கட்டட வளாகத்தில் தமிழக அரசின், 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தில், கிராமப்புற மக்களையும் தொழில் முனைவோர்களாக மேம்படுத்த உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
அங்கு வீரபாண்டி, மகுடஞ்சாவடி, பனமரத்துப்பட்டி ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த நுண் தொழில் செய்வோர், கைவினைஞர்கள், சிறு தொழில் செய்வோர், மகளிர் சுய உதவிக்குழுவினர், வேளாண் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட படித்த இளைஞர்களுக்கு, புது தொழில் வாய்ப்பு, அதற்கான திட்டங்கள், மதிப்பீடு, கடன் உதவி, மானிய திட்டங்கள், சந்தை வாய்ப்பு, வணிக இணைப்பு, ஒப்பந்த தயாரிப்பு, ஆவண பராமரிப்பு, தொழில் தொடங்க தேவையான அனைத்து துறை சான்றிதழ்களை பெற்றுத்தருவது, பதிவு செய்வது போன்ற அனைத்து உதவிகளையும் அரசு நிர்ணயித்துள்ள கட்டண அடிப்படையில் செய்து தருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி அலுவலகம் முன் விளம்பர பலகையும் வைக்கப்பட்டுள்ளது.