/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தரைப்பாலம் இருபுறமும் தடுப்பு வாகன ஓட்டிகளுக்கு நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை

ADDED : ஆக 23, 2024 01:36 AM
வீரபாண்டி, ஆக. 23-
மழைக்காலங்களில் தரைப்பாலம் மூழ்குவதால், அதன் இருபுறமும் தடுப்பு கற்கள் வைத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் முழுதும் இரு வாரங்களாக, மாலை, இரவில் மழை பெய்து வரு
கிறது. இதனால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக ஆட்டையாம்பட்டி அருகே இனாம் பைரோஜி புதுப்
பாளையத்தில் சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லை திருமணிமுத்தாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் அடிக்கடி வெள்ளத்தால் மூழ்கி போக்கு
வரத்து தடைபட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள், 5 கி.மீ., சுற்றி, ஆட்டையாம்பட்டி வழியே சென்று வரும் அவலமும் தொடர்கிறது.
இந்நிலையில் அசம்பாவிதத்தை தவிர்க்க, தரைப்பாலத்தின் இரு கரைகளிலும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சிமென்ட் கற்களை வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து கற்களுக்கு நேற்று வெள்ளை வண்ணம் பூசினர். மேலும், 'பாலம் பழுதடைந்துள்ளது. வாகனங்கள் மெதுவாக செல்லவும்' என அறிவுறுத்தி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாகன ஓட்டிகளை எச்சரித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது.